உலகின் அதிக எடை கொண்ட 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை!!

Read Time:3 Minute, 19 Second

b79a12ec-ddec-4797-8b10-8109e46bb9b4_S_secvpfசராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் ஒரு நோயாளியின் உடலில் இருந்து பழுதடைந்த 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த ஒருவர் நீண்ட நாட்களாக அடிவயிற்றுப் பகுதியில் தீராத வலியுடன் வேதனைப்பட்டு வந்தார். நாளடைவில் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேற தொடங்கியது. இதனையடுத்து, தொடர்ச்சியாக கடும் காய்ச்சலுக்கும் உள்ளான அந்த நோயாளி கடந்த மாதம் டாக்டரிடம் சென்றார்.

அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் சிறுநீரக வீக்க நோயான Autosomal Dominant Polycystic Kidney Disease (ADPKD) நோயால் அவர் அவதிப்படுவது தெரியவந்தது.

சிறுநீரில் கலந்து வெளியேறும் அதிக ரத்தப்போக்கால் அந்த நோயாளியின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து கொண்டே வந்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இரு சிறுநீரகங்களையும் அகற்றிவிட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தினால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் உடனடியாக சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்தே தீர வேண்டும் என டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிறுநீரக தானம் வழங்க முன்வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர்கள் முதலில் 2.75 கிலோ எடை கொண்ட அவரது ஒரு சிறுநீரகத்தை அகற்றி, வெற்றிகரமாக மாற்று சிறுநீரகத்தை பொருத்தினர். இதனையடுத்த ஒரு வாரத்தில் 2.5 கிலோ எடை கொண்ட அவரது பழுதடைந்த மற்றொரு சிறுநீரகமும் அகற்றப்பட்டது.

சராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் இவரது சிறுநீரகம் அதைவிட 20 மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்ததால் இந்த ஆபரேஷன் சற்று சிக்கலானதாகவும், சிரமமானதாகவும் இருந்தது. ஆனால், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் இந்த சிக்கலான ஆபரேஷனை வெகு சாதுர்யமாக செய்து உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுநீரகத்தை அகற்றிய டாக்டர்கள் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர்.

இந்த இரு சிறுநீரகங்களையும் அகற்றிய பிறகு உடல் எடையில் சுமார் 5.5 கிலோ குறைந்த அந்த நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிப்மர் ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்: புதுவை கோர்ட்டு தீர்ப்பு!!
Next post குடும்பத்துக்கு மிரட்டல்: உலக திருநங்கையர் போட்டியில் பங்கேற்க சென்ற கேரள வாலிபர் வெளியேறினார்!!