திண்டுக்கல் அருகே டுட்டோரியலில் மலர்ந்த காதல்: மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!

Read Time:2 Minute, 52 Second

05107537-155f-4e5d-8e80-9d9bdfd56ef2_S_secvpfதிண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் செபாஸ்டின்சாரதி(வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

அங்கு திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த அண்ணாத்துரை மகன் சதீஸ்குமார்(18) படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்–2 தேர்வில் தமிழ்பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றார். மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்ததால் முழுநேர மாணவராக பயின்று வந்தார்.

வகுப்பில் செபாஸ்டின்சாரதி பாடம் நடத்தும்போது சதீஸ்குமார் அடிக்கடி சந்தேகம் கேட்டு வந்தார். இதனால் அவர்களிடையே ஏற்பட்ட நெருங்கிய பழக்கம் காதலாக மாறியது.

இதனால் அவர்கள் வகுப்பு முடிந்ததும் வெளியே ஜாலியாக சுற்றிதிரிந்தனர். மேலும் விடுமுறை தினங்களிலும் வகுப்பு இருப்பதாக கூறி பெற்றோரை ஏமாற்றிவிட்டு வெளிஇடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விசயம் தெரியவரவே இருவரது வீட்டிலும் கண்டித்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பை கைவிடவில்லை. நேற்று வேலைக்கு சென்ற செபாஸ்டின்சாரதி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது தந்தை தேவராஜ் டுட்டோரியல் சென்று விசாரித்தார். அப்போதுதான் மாணவர் சதீஸ்குமாருடன் ஆசிரியை ஓடியிருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ் அதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள்.

சமீபத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி மாணவனுடன் ஓடிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் போலீஸ் பிடியில் சிக்காத நிலையில் திண்டுக்கல்லில் மாணவனுடன் ஆசிரியை ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பரம் அருகே குடிபோதையில் கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!!
Next post கோவையில் கல்லூரிக்குள் கஞ்சா சப்ளை: கேரள மாணவர் கைது!!