தாம்பரம் அருகே குடிபோதையில் கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

Read Time:1 Minute, 26 Second

d2b644c2-2839-4e2d-b3ce-137d8598f0e4_S_secvpfதாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். எனவே அவரை மனைவி திட்டினார். இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தீனதயாளன் வீட்டில் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியால் தனக்கு தானே வயிற்றில் குத்திக் கொண்டார்.

வயிற்றில் கத்தி ஆழமாக இறங்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பீர்க்கன்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணாடம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது!!
Next post திண்டுக்கல் அருகே டுட்டோரியலில் மலர்ந்த காதல்: மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!