ஓரினச்சேர்கையாளரான கணவனின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன்: டெல்லி பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!!

Read Time:1 Minute, 57 Second

274dce45-08b5-49ae-87a3-791915fc7795_S_secvpfடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளார்.

31 வயதாகும் பிரியா வேத என்ற அந்த பெண் மருத்துவர் எழுதியுள்ள நான்கு பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

ஓரினச்சேர்கையாளரான எனது கணவர், என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார். ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் இடையில் எவ்வித உடல் ரீதியான தொடர்பும் ஏற்படவில்லை. திருமணம் ஆனதற்கு பின், எனது கணவர் தனது லேப்டாப் மூலம் போலி ஜி-மெயில் முகவரியை பயன்படுத்தி ஓரினச்சேர்க்கை நண்பர்களுடன் சாட்டிங் செய்துள்ளதை கண்டேன். இது தெரிந்ததும், மனைவி என்ற முறையில் அவருக்கு உதவ நான் முடிவு செய்தேன். ஆனால் நாளாக நாளாக என்னை அவர் மனரீதியாக கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.

ஆகவே என்னால் அவருடன் சேர்ந்து வாழமுடியாது என்று எழுதிவைத்துள்ளதுடன், நீங்கள் மனிதப்பிறவியே அல்ல. எனது வாழ்க்கை கெடுத்த நீங்கள் ஒரு சாத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவரான பிரியாவின் கணவரும் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாலி கட்டிய கள்ளக்காதலன்: தவிக்கவிட்டு சென்றதால் கல்லூரி மாணவி போலீசில் புகார்!!
Next post உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!