ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாலி கட்டிய கள்ளக்காதலன்: தவிக்கவிட்டு சென்றதால் கல்லூரி மாணவி போலீசில் புகார்!!

Read Time:3 Minute, 54 Second

f803228b-98b8-4de8-91cf-72a3733ede3c_S_secvpfமதனப்பள்ளி மண்டலம் சி.பி.எம்.பஞ்சாயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 28). பாணிபூரி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோல் மேற்கண்ட பஞ்சாயத்தை சேர்ந்தவர் பார்கவி (21). இவர், மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.
இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். பார்கவியிடம், உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என ராஜேந்திரபிரசாத் ஆசை வார்த்தைகளை கூறி வந்தார். இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பார்கவி கர்ப்பமானார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர், ராஜேந்திரபிரசாத்தை வலியுறுத்தி உள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவர், பார்கவியை புங்கனூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பார்கவிக்கு கடந்த 17–ந்தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்துக்காக மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் பார்கவிக்கு கழுத்தில் தாலியில்லை, நாங்கள் எப்படி பிரசவம் பார்ப்பது? என கூறி பிரசவம் பார்க்க மறுத்தனர்.

பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பார்கவிக்கு, ஆஸ்பத்திரியிலேயே வைத்து அவரின் கழுத்தில் ராஜேந்திரபிரசாத் தாலி கட்டினார். அதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்களும், நர்சுகளும் பிரசவம் பார்த்தனர். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவ அறையில் இருந்து பார்கவியை வார்டுக்கு அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு ராஜேந்திரபிரசாத் தலைமறைவாகி விட்டார். பச்சிளம் சிசுவோடு ஆதரவின்றி தனிமையில் தவித்த பார்கவி மனமுடைந்தார்.

அப்போது அவர் பிரசவ வார்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்கவியை தடுத்து நிறுத்தி புத்திமதி கூறினர். அதில் சமரசம் ஆனதும் அவர் படுக்கைக்கு வந்தார்.

பின்னர் நேற்று முன்தினம் மாலை மதனப்பள்ளி புறநகர் போலீசுக்கு சென்று ராஜேந்திரபிரசாத் மீது பார்கவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ராஜேந்திரபிரசாத்தை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தனியார் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரைவரை வழிமறித்து தாக்கி ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்த 4 போலீசார் கைது!!
Next post ஓரினச்சேர்கையாளரான கணவனின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன்: டெல்லி பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!!