சித்தூர் அருகே சொத்து பாகபிரிவினை தகராறு: அண்ணன் மகன் வெட்டிக் கொலை!!

Read Time:1 Minute, 36 Second

3146b810-edf2-4b42-b19e-ede972dbd700_S_secvpfசித்தூர் அடுத்த குப்பம் மண்டலம் சுடலிகுதூர் எஸ்.சி.காலனியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது தம்பி பலராமன் (வயது 44). இருவருக்கும் சொத்து பாகபிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு குடும்பத்தாரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் அருகே உள்ள தேக்குமரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது பரசுராமனின் மகன்கள் ஜகன் (வயது 30), பெருமாள் (24) ஆகியோர், பலராமனிடம் நிலம் பாகபிரிவினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பலராமன் கையில் வைத்திருந்த அரிவாளால், ஜகனையும், பெருமாளையும் சரமாரியாக வெட்டினார். இதில் ஜகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெருமாளின் கை துண்டானது. இதையடுத்து பலராமன் தப்பி ஓடிவிட்டார். ஜகனின் பிணத்தையும், படுகாயமடைந்த பெருமாளையும் மீட்டு குப்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பலராமனை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலாய்த்த சிறுமியை கண்ணாடியை உடைத்து பயமுறுத்திய கோபக்கார கொரில்லா – வீடியோ இணைப்பு!!
Next post டிரைவரை வழிமறித்து தாக்கி ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்த 4 போலீசார் கைது!!