தல மாற வேண்டும்….!!

Read Time:1 Minute, 59 Second

ajith2‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

இந்நிலையில், நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தல ரசிகர்கள் அஜித்துக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர். அதாவது, ‘மங்காத்தா’ படம் முதல் ‘என்னை அறிந்தால்’ படம் வரை அஜித் தனது தலைமுடியை சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் வைத்து நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த ஸ்டைலை வெகுவாக ரசித்த ரசிகர்கள் தற்போது, இந்த ஸ்டைலில் இருந்து அஜித் மாறவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதனால், அஜித் தற்போது நடிக்கவிருக்கும் சிறுத்தை சிவா படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் இருந்து மாறி, நடிக்கவேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள். இதை அஜித் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்த 2 வயது மகள் உடலை பாதுகாக்கும் பெற்றோர்!!
Next post கலாய்த்த சிறுமியை கண்ணாடியை உடைத்து பயமுறுத்திய கோபக்கார கொரில்லா – வீடியோ இணைப்பு!!