பறிபோன புவனேஸ்வரியின் வீடு…!!

Read Time:1 Minute, 25 Second

bhuvaneswari-pictures2சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை புவனேஸ்வரி (வயது 32). இவர் கோவை அன்னூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

எனக்கு சொந்தமாக கோவை அன்னூரில் வீடு மற்றும் தியேட்டர் 64 சென்ட் இடத்தில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இந்த வீடு, தியேட்டரை அன்னூரை சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் சுப்பிரமணியன் போலி ஆவணங்கள் தயாரித்து அன்னூர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து எனது வீடு மற்றும் தியேட்டரை அபகரித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

புகாரின்பேரில் சுப்பிரமணி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் லெட்சுமணதாஸ் விசாரணை நடத்தி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் மார்பு வலியோடு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைவரிசை: டாக்டருக்கு 18 மாத சிறை தண்டனை!!
Next post திருமண நாளை கொண்டாட முடியாமல் திண்டாடும் ஐஸ்வர்யா!!!