இங்கிலாந்தில் மார்பு வலியோடு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைவரிசை: டாக்டருக்கு 18 மாத சிறை தண்டனை!!

Read Time:1 Minute, 39 Second

f2177f21-1cd8-4fc1-a0e6-842a6dd83a34_S_secvpfஇங்கிலாந்தின் துர்ஹம் கவுன்ட்டி பகுதியில் டாக்டராக தொழில் செய்துவரும் உண்ட் டுன் மவுங் என்பவரிடம் தீராத மார்பு வலியால் அவதிப்பட்ட ஒரு இளம்வயதுப் பெண் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக வந்தார்.

தனியே வந்திருந்த அந்தப் பெண்ணை பரிசோதனை கட்டிலின் மீது படுக்க வைத்த அந்த டாக்டர் அவரது மேலாடையையும், உள்ளாடையையும் கழற்றும்படி கூறினார். பின்னர், பரிசோதனை செய்யும் பாவனையில் அந்தப் பெண்ணின் மார்பகங்களை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்த தொடங்கிய உண்ட் டுன் மவுங்-கின் வக்கிரப் புத்தியை புரிந்துகொண்ட அந்தப் பெண், உள்ளூர் தேசிய சுகாதார அதிகாரிகளிடம் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

இதனையடுத்து, அந்த டாக்டரை கைது செய்த போலீசார், அவர் டாக்டர் தொழில் செய்யவும் கடந்த 2013-ம் ஆண்டு தடை விதித்தனர். இந்நிலையில், இவர் மீது துர்ஹம் கிரவுன் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலி குளிர்பான பாட்டில்களால் காஸா நண்பர்கள் உருவாக்கிய படகு!!
Next post பறிபோன புவனேஸ்வரியின் வீடு…!!