கள்ளக்காதலன் கைவிட்டதால் பாளையில் நடுரோட்டில் தீக்குளித்த இளம்பெண்!!
பாளை பெருமாள்புரம் பஸ் நிறுத்தத்தில் இன்று காலை இளம்பெண் ஒருவர் பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் கேனில் வைத்திருந்த மண்எண்ணெய் தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அந்த பெண் உடலில் எரியும் தீயுடன் பஸ் நிறுத்தம் முன்பு நடுரோட்டில் கீழே விழுந்தார்.
அப்போது அங்கு ஏராளமானோர் பஸ் ஏற காத்து நின்றனர். அவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெருமாள்புரம் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அந்த பெண்ணை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தீக்குளித்த பெண்ணின் பெயர் தீபா (வயது22) பட்டப்படிப்பு படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே குமார் என்பவருடன் திருமணமாகி விட்டது. இவர்களுக்கு 2 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பாளை மார்க்கெட் அருகே உள்ள எரிபெத்த நாயனார் தெருவில் வசித்து வந்தனர்.
திருமணத்திற்கு முன்பு தீபா தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அப்போது அவருக்கும், பாளை அருகே உள்ள கீழநத்தத்தை சேர்ந்த வெற்றிவேல்(21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணமான பின்னரும் அவர்களது பழக்கம் நீடித்ததாக தெரிகிறது. வெற்றிவேலுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த விபரம் தீபாவின் கணவர் குமாருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதமாக பிரிந்து வாழ்கின்றனர்.
அதன் பிறகு தீபா, வெற்றிவேலுடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். மேலும் நேரிலும் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் தீபா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெற்றிவேலை வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு வெற்றிவேல் மறுத்தார்.
இந்நிலையில் இன்று காலை வெற்றிவேல் பெருமாள்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துவிட்டார். அங்கு தீபா வந்து வெற்றிவேலை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதற்கு வெற்றிவேல் மறுப்பு தெரிவிக்கவே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தீபா தனது வீட்டிற்கு திரும்பி செல்ல பெருமாள்புரம் பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது தான் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பலத்த தீக்காயம் அடைந்த தீபா கவலைக்கிடமான நிலையில் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடி வரும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிறுத்தத்தில் இளம்பெண் தீக்குளித்த சம்பவத்தால் பாளை பெருமாள்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating