இந்து மத விழாவில் பணத்தை வாரி இறைத்த பா.ஜ.க பெண் எம்.பி – வீடியோ பரவியதால் சர்ச்சை!!

Read Time:1 Minute, 47 Second

10778c0b-fcc6-4802-b791-44f7fa823ab1_S_secvpfகுஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் நடந்த மத-சமூக விழா ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ.க பெண் எம்.பி ஒருவர் பணத்தை வாரி இறைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

ஜாம் நகர் தொகுதியைச் சேர்ந்த எம்.பி பூனம் மடம், ஜுனாகத் மாவட்டத்தின் வீரவல் நகரத்தில், நேற்றிரவு நடந்த புகழ்பெற்ற பல்கா தீர்த்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் தன்னார்வலர்கள் நடனமாடிய பொது பூனம் அவர்கள் மீது 10 ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்துள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த பூனம் சவுராஷ்டிரா மக்களின் சடங்கில் இப்படி செய்வது 100 வருடங்களுக்கும் மேலாக வழக்கம். இது பணப் பரிமாற்றம் அல்ல அவர்களுக்கு நான் கூறும் வாழ்த்து. அந்த பணம் நன்கொடையாக வந்தது, அது நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றார்.

நன்கொடையாக எவ்வளவு ரூபாய் கிடைத்தது என்ற கேள்விக்கு அதை கணக்கிடவில்லையென்று கூறிய பூனம். இந்த விழாவில் சில விவசாயிகளும் கலந்து கொண்டதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தவறானது என்று மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் குழந்தை மோகத்தால் தாய்ப்பால் கொடுக்காமல் பிறந்த பெண் குழந்தையை சாகவிட்ட தாய்!!
Next post வேலூர்: பெற்றோரால் நிச்சயித்து நின்ற திருமணம் காதலில் ஒன்று சேர்ந்தது!!