பீட்சாவுடன் சேர்த்து ஏடாகூடமான சிலவற்றையும் கேட்ட இளம்பெண்!!

Read Time:2 Minute, 25 Second

Untitled-13உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த பீட்சா நிறுவனம் அதை செய்து கொடுத்துள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் மென்லோ பார்க்கில் உள்ள பீட்சா கடைக்கு ஒரு ’மவ் வோவி’ ஒரு ’ஃபிக்கி பிக்கி’ (???) பீட்சா வேண்டுமென கேட்டு ஆர்டர் வந்தது, சரி… கூடவே ஒரு ஸ்பெஷல் ரிக்வஸ்ட்டும் வந்தது… ”உங்களிடம் இருக்கும் டெலிவரி பையன்களிலேயே அழகான பையனை அனுப்பி, என்னை அழகானவள் என்று சொல்லச் சொல்லுங்கள்” என்பதுதான் அது.

’இதுபோன்ற அழைப்புகள் வருவது சகஜமென்பதால்(!!!) நான் நிறைய காலேஜ் பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றேன்’ என்று சொல்லும் டெலிவரி பாய் ஆர்டர் தந்த வீட்டுக்குச் சென்ற போதுதான், அவர் கற்பனை செய்து வைத்ததைப் போல், அங்கு பெண்கள் கூட்டமெல்லாம் இல்லை என்பது தெரிய வந்தது.

இருந்ததோ, பிறந்த நாள் கொண்டாடுவதற்காகக் காத்திருக்கும் ஒரு இளம் பெண். ’தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த யாரும் வரவில்லை’ என்று அழுது கொண்டே அந்தப் பெண் கூற, அவள் மீது பரிதாபப்பட்ட அந்த டெலிவரி பாய் சிறிது நேரம் அவளுக்கு ஆறுதலாக பேசி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு அங்கிருந்து நெகிழ்ச்சியுடன் வெளியேறினான். எதையோ மறந்து வைத்ததைப் போல் திரும்ப அவள் வீட்டுக்குப் போனவன் “நீ ரொம்ப அழகாயிருக்க”…. என்றான்…. அவ்வ்வ்வ்வ்….
ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததற்காக பீட்சா கம்பெனி அந்த டெலிவரி பாயை எச்சரித்தது தனிக்கதை…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீது சந்திரா- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-
Next post பிரபல ஓவியராக மாறிய 4 வயது ஆடு!!