ஈராக்கில் 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டும் 6 வயது சிறுமி: அதிர்ச்சி வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 36 Second

f3302f22-a8d2-4154-bf11-da45f132f43a_S_secvpfஇயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள். இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்திகாட்டி ‘நானூறு’ என்று அவள் பதில் அளிக்கும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த சிறுமி வெறும் பாலைவனத்தில்தான் சுடுகிறாளா? அல்லது, எதிரே ஏதேனும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பது இந்த வீடியோவில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை கூட்டாக கற்பழித்து வீடியோ படம் பிடித்த 8 பேருக்கு 10 ஆண்டு சிறை!!
Next post ஆக்ரா நகரில் பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி!!