ஆண்டிப்பட்டி அருகே 10–ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்!!

Read Time:1 Minute, 20 Second

f3c6a152-1d12-421b-afb5-034b176db37f_S_secvpfதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோம்பையம்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது 15 வயதுள்ள மகள் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயது காரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் வைகாசி மாதம் நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. இந்த தகவல் சமூக நலத்துறை அதிகாரிகள் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இவர்கள் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பெண்ணுக்கு 15 வயதே உள்ளதால் சட்டப்படி திருமணம் நடத்தக்ககூடாது என்று எச்சரித்தனர்.

உடனே பெண்ணின் பெற்றோர் இப்போதைக்கு திருமணம் நடைபெறாது என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்தனர். எனவே இந்த மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு!!
Next post சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து பெண் குதித்து தற்கொலை!!