தொழில் அதிபர் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!!

Read Time:5 Minute, 10 Second

e038b300-e9ea-49fb-8106-7eb33b894e0f_S_secvpfகன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பகவத் சிங் என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். அலுவலக வேலையுடன், தொழில் அதிபரின் வீட்டிலும் அவருக்கு உதவி செய்தார்.

இதில் தொழில் அதிபர் மனைவியுடன் பகவத் சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியில் சென்றனர்.

அப்போது தொழில் அதிபரின் மனைவி தனது குடும்ப பிரச்சினைகளை பகவத் சிங்கிடம் கூறினார். இதை தெரிந்து கொண்ட பகவத் சிங், தொழில் அதிபர் மனைவியிடம் பிரச்சினைகளை தீர்க்க மந்திரவாதி ஒருவரை சந்தித்து பேசினால் பிரச்சினைகள் தீருமென கூறினார்.

இதை நம்பி தொழில் அதிபரின் மனைவி பகவத் சிங்குடன் சென்றார். அவருடன் சென்று திரும்பிய பின்பு பகவத் சிங்கின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர், ஊரில் சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு பணம் புரண்டது.

இது தொழில் அதிபருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர், இதுபற்றி மனைவியிடம் கேட்டார். அப்போது பகவத் சிங், தன்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதை காட்டி மிரட்டியதால் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

இதைக்கேட்டு ஆத்திர மடைந்த தொழில் அதிபர், வேலையில் இருந்து பகவத் சிங்கை நீக்கினார். சில மாதங்கள் கடந்த நிலையில் தொழில் அதிபர் மனைவியும் திடீரென மாயமானார். இதுபற்றி தொழில் அதிபர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.

அதில், தனது மனைவியை பகவத்சிங் கடத்திச் சென்று இருக்கலாம் என்று கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பகவத்சிங்கையும், தொழில் அதிபர் மனைவியையும் தேடி வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழில் அதிபரின் மனைவி நெல்லையில் உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் நெல்லைக்கு சென்று தொழில் அதிபர் மனைவியை மீட்டு வந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுபற்றி நான், பகவத் சிங்கிடம் கூறினேன். அவர், என்னை மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து அவர் என்னை ஆபாச படம் எடுத்தார். அதை காட்டி மிரட்டியதால் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன். சென்னையில் தங்கி இருந்தபோது பகவத் சிங்கின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கிளம்பியது.

இதுபற்றி என் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் என்னை மீட்க முயன்றனர். இதை அறிந்ததும், பகவத்சிங் என்னை நெல்லையில் உள்ள ஒரு காப்பகத்தில் விட்டுச் சென்றார். அங்கிருந்து குடும்பத்தார் என்னை மீட்டதாக தொழில் அதிபரின் மனைவி தெரிவித்தார்.

இதையடுத்து தொழில் அதிபர் மனைவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த பகவத் சிங்கை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அவர், மயிலாடி அருகே இருப்பது தெரிய வந்தது. அவரை கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தொழில் அதிபர் மனைவியை கடத்தி சென்றதும், அவரை ஆபாச படம் எடுத்து அதனை செல்போனில் பதிவு செய்து வைத்ததையும் வாக்குமூலமாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பகவத் சிங்கின் செல்போனை பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளையார்கோவில் அருகே 4–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது!!
Next post புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!!