ஒரே கல்லூரியில் காதல்: போலீஸ் நிலையத்தில் விரிவுரையாளர் ஜோடி தஞ்சம்!!

Read Time:1 Minute, 32 Second

7a732c2c-fe4f-4aaf-80b2-48e1553dbc37_S_secvpfதிண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். (வயது 29). பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மினித்ரா (25). இவர்கள் 2 பேரும் பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் பாட இடைவேளையின் போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் மினித்ராவின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயந்து போன காதல் ஜோடி பெற்றோர் எப்படியும் பிரித்து விடுவார்கள் என்று கருதி கடந்த 14–ந் தேதி பதிவு திருமணம் செய்தனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு இருதரப்பு பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டனர். பெண்ணின் வீட்டார் உடன்படவில்லை. காதலனின் பெற்றோர் சம்மதித்தனர். எனவே அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீரங்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை!!
Next post அழகப்பா பல்கலைக்கழகத்தில் காசோலையில் போலி கையெழுத்திட்டு மோசடி செய்த உதவியாளர் கைது!!