மனைவி தீக்குளித்து தற்கொலை: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

Read Time:1 Minute, 47 Second

dd309de3-d084-46f5-9f5a-b04adf7ceb45_S_secvpfபவானி அருகே நல்லி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (21). நாராயணன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் மனமுடைந்த அலமேலு, கடந்த 8–11–2012 அன்று வீட்டில் வைத்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி திருநாவுக்கரசு, குற்றம் சாட்டப்பட்ட நாராயணனுக்கு மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார்.

மேலும் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நாராயணனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்தார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருங்கல் போலீஸ் நிலையத்தில் இளைஞர் காவல்படை வீரருடன் இளம்பெண் தஞ்சம்!!
Next post ஸ்ரீரங்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை!!