விமான நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குடியுரிமை அதிகாரி கைது!!

Read Time:1 Minute, 48 Second

0c70d027-63ec-4d89-aed8-3a822c407d5a_S_secvpfவிமான நிலையத்தில் பெண் பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் ஹாங்காங் செல்லும் வழியில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மாதம் 19–ந்தேதி சென்றார். அப்போது அவரிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரி வினோத்குமார் என்பவர் சோதனை நடத்தினார். சோதனையின்போது, அந்த அதிகாரி பெண் பயணியிடம் ஆட்சேபனைக்குரிய கேள்விகளை எழுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண், டெல்லியில் உள்ள குடியுரிமை துறை கமிஷனருக்கு இ மெயில் மூலம் புகார் தெரிவித்தார். பின்னர் அவர் ஹாங்காங்கில் இருந்து திரும்பிய பின்னர் தனது கணவர் மற்றும் மகனுடன் கடந்த 23–ந்தேதி புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய டெல்லி போலீசார், டெல்லி குடியுரிமை அதிகாரி வினோத்குமாரை நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதில் எந்த தவறும் இல்லை: மசரத் ஆலம் திமிர்ப் பேச்சு!!
Next post திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் – வீடியோ இணைப்பு!!