கூடலூர் அருகே குடி போதையில் மனைவியை இன்று அடித்துக் கொன்றவர் கைது!!

Read Time:1 Minute, 27 Second

f0fdfd75-bc2d-4c45-b501-fe7ee71201da_S_secvpfஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கூடலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலன்(45). கூலித் தொழிலாளியான இவர் தினமும் குடி போதையில் வீட்டுக்கு வந்து மனைவி வள்ளியிடம் தகராறு செய்து, சண்டையிடுவதுண்டு.

வழக்கம்போல் நேற்றிரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பெரும் சச்சரவில் முடிந்தது. இன்று காலை போதை தெளிந்து விழித்த கோபாலன், நேற்றிரவு நடைபெற்ற சம்பவத்தை இன்று பெரிதுபடுத்தி மனைவியுடன் வாக்குவாதம் செய்தார்.

வள்ளியும் எதிர்த்துப் பேச, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து மனைவியை தாக்கினார். இதனால், தலை மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த வள்ளி(35) சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து, உயிரிழந்தார்.

இந்த கொலை பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் கோபாலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2.90 கோடி!!
Next post போலி சான்றிதழ் விவகாரம்: மோசடி பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்த முடிவு!!