திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2.90 கோடி!!

Read Time:2 Minute, 6 Second

8d41fca7-94f6-44e2-91f2-b0f9c1af24ac_S_secvpfதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 90 லட்சம் கிடைத்தது. 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பு தலைமுடி காணிக்கை செலுத்துவதும், தரிசன முடிவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதும் வழக்கம். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை அன்றாடம் எண்ணி அறிவிக்கப்படும்,

நேற்று ஒரே நாளில் உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 90 லட்சம் வருமானமாக கிடைத்ததாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் மகாலகு தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். அன்று, மொத்தம் 60 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

நடைபாதை வழியாக வந்து திவ்ய தரிசனம் செய்ய 5 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரமும் ஆயிற்று. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் வாங்கி ஏழுமலையானை தரிசிக்க சென்றவர்கள், சுமார் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ் புத்தாண்டு தினமான இன்றும், திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதைத்தொடர்ந்து, மகாலகு தரிசன முறை அமல்படுத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது!!
Next post கூடலூர் அருகே குடி போதையில் மனைவியை இன்று அடித்துக் கொன்றவர் கைது!!