போதைக்கு அடிமையான இரு வாலிபர்கள் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை!!

Read Time:1 Minute, 40 Second

b49fc084-6f54-481a-9247-f581f5fbee3f_S_secvpfபஞ்சாப் மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன இரு வாலிபர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள பக்வாரா மாவட்டத்தின் ஹர்தாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த குல்விந்தர் சிங்(35), ராகேஷ் குமார்(23) இருவரும் தீமை தரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டிருந்தனர். கையில் பணம் இல்லாத வேளைகளில் போதைப் பொருள் வாங்க வழியில்லாமல் பித்து பிடித்ததைப் போல் திரிந்து வந்த இவர்கள் இருவரும் நேற்றிரவு சப்ரோர் ரெயில் கிராசிங் பகுதி அருகே சென்றனர்.

அவ்வழியாக வேகமாக வந்த அமிர்தசரஸ்-புது டெல்லி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன் திடீரென பாய்ந்த குல்விந்தர் சிங் உடல் சிதைந்து, துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கோரக் காட்சியை பார்த்த சில நிமிடங்களில் அதே தண்டவாளத்தில் வந்த மும்பை-ஜம்மு டாவி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன் பாய்ந்த ராகேஷ் குமாரும் பரிதாபமாக பலியானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.,யில் இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதமாற்றம்!!
Next post திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு!!