புடவை மட்டுமல்ல, குர்தி-மேற்கத்திய உடைகளிலும் வலம் வரும் ஏர் இந்தியா பணிப்பெண்கள்!!

Read Time:1 Minute, 31 Second

1dbd279e-6779-4f83-a2c2-9d8ae997e306_S_secvpfவிமானப் பயணிகளிடம் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரைச் சொன்னவுடன் ஏர் இந்தியாவின் விமானம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, இந்திய பாரம்பரியப்படி புடவை கட்டி ‘நமஸ்தே’ சொல்லும் அதன் பணிப்பெண்கள் நிச்சயம் நினைவுக்கு வருவார்கள். அதுவும் சிகப்பு போன்ற பளிச் நிறங்களிலேயே அவர்கள் சீருடை (புடவை) அணிந்திருப்பார்கள்.

இந்த சீருடையை மாற்ற கடந்த வருடம் அக்டோபர் மாதம் முடிவு செய்த ஏர் இந்தியா நிறுவனம், புதிய சீருடையை வடிவமைக்கும் பணியை தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்திடம் (NIFT) ஒப்படைத்தது.

இந்நிலையில், பஞ்சாப் சீக்கியர்களின் பண்டிகையான பைசாகியின் போது நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பணிப்பெண்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடையில் புடவை மட்டுமின்றி குர்தி மற்றும் சில மேற்கத்திய உடைகளும் இடம்பெற்றுள்ளன.

முதற்கட்டமாக விமானப் பணிப்பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றிலும் 2 செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரீட்சையில் தோல்வி: ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!
Next post கார் டயரின் தடங்களால் விண்வெளியில் உள்ள தந்தைக்கு அன்பை வெளிப்படுத்திய சிறுமி: சிறப்பு வீடியோ!!