சாராய வழக்கில் மனைவி கைது: அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!!

Read Time:1 Minute, 38 Second

dcfef7c4-c568-4ab5-80f2-9b74aa25e8d7_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள குழல்மன்னம் குத்தனூரை சேர்ந்தவர் வேலாயுதம். கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை(வயது 42).

இவர் வீட்டின் பின்புறம் உள்ள புதர் மறைவில் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் குழல் மன்னம் மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று தெய்வானையை கைது செய்தனர்.

அங்கிருந்த 6 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான தெய்வானை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். வேலைக்கு சென்றிருந்த வேலாயுதம் மாலையில் வீடு திரும்பினார். அப்போதுதான் அவருக்கு மனைவி கைதான விவரம் தெரியவந்தது.

இதனால் அவமானமடைந்த வேலாயுதம் வீட்டின் பின்புறம் வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழல்மன்னம் போலீசார் வேலாயுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி சாராய வழக்கில் கைதான அவமானத்தில் கணவர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை!!
Next post பதனீர் இறக்கும் தொழிலில் சாதனை படைக்கும் கேரள பெண்கள்!!