ரோந்து பணியின்போது போலீஸ்காரரை தாக்கிய 2 தொழிலாளர்கள் கைது!!

Read Time:1 Minute, 21 Second

81839eea-de0e-4373-9a6b-ec4f93b9c064_S_secvpfதிருத்தணி பகதூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி. இவர் நேற்று இரவு திருத்தணி அருகே உள்ள அந்திமஞ்சரி பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி (35), ராமு (34) என்ற 2 தொழிலாளர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். போலீஸ்காரர் ராமமூர்த்தி இங்கு மது குடிக்க கூடாது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜோதி, ராமு இருவரும் ராமமூர்த்தி கையில் இருந்த லத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் காயம் அடைந்த ராமமூர்த்தியை சிகிச்சைக்காக பகதூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ராமமூர்த்தி பகதூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதி, ராமுவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10–ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!
Next post கள்ளக்குறிச்சி அருகே பூச்சு கொல்லி மருந்து டப்பாவை முகர்ந்து பார்த்த குழந்தை சாவு!!