10–ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!

Read Time:2 Minute, 45 Second

142fd15e-5864-41b5-b823-fb93e4398f6c_S_secvpfநெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10–ம்வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 31–ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது.

10–ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 31–ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றுள்ளார். போலீசார் இருவரும் எங்கு சென்றார்கள் என்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

10–ம்வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாரி வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை: உறவினர்களான அக்காள்–தம்பிகள் கைது!!
Next post ரோந்து பணியின்போது போலீஸ்காரரை தாக்கிய 2 தொழிலாளர்கள் கைது!!