சிவகங்கை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு!!

Read Time:1 Minute, 48 Second

021e9313-f367-423b-b82f-406be336caf8_S_secvpfசிவகங்கை மாவட்டம் நரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி ஜெயலதா (வயது 31). இவர்கள் காளையார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மாலையில் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் இருவரும் மறவமங்கலம் தரைப்பாலத்தில் வந்த போது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.

அதில் 2 பேர் வந்துள்ளனர். ஒருவன் ஹெல்மெட் அணிந்திருக்க, மற்றொருவன் முகம் தெரியாத வகையில் துணியால் மூடியபடி வந்துள்ளான். அந்த மோட்டார் சைக்கிள், சரவணன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் இடித்துள்ளது.

இதில் நிலைதடுமாறி ஜெயலதா கணவருடன் கீழே விழுந்தார். அப்போது அந்த மர்ம மனிதர்கள், ஜெயலதாவை தாக்கி கழுத்தில் கிடந்த தாலி உள்பட 15 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை, சரவணன் தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரோட்டில் சப்–இன்ஸ்பெக்டர் மகள் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!
Next post அதிகாரி வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை: உறவினர்களான அக்காள்–தம்பிகள் கைது!!