களக்காடு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் டிஸ்மிஸ்!!

Read Time:1 Minute, 13 Second

5c55a72b-5bcc-4dbb-b9db-e274d28e1f97_S_secvpfகளக்காடு அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி 5–வது வகுப்பு படித்து வருகிறாள். அவளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் (வயது 54) பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுபற்றி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி சுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பட்டது.

அதன்படி நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சுப்பிரமணியன் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா இரவிப்புதூரை சேர்ந்தவர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம்: இளம்பெண்ணுடன் வாழ மறுத்த என்ஜினீயர் கைது!!
Next post காதலிக்க வற்புறுத்தி வாலிபர் செருப்பால் அடித்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை!!