வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம்: இளம்பெண்ணுடன் வாழ மறுத்த என்ஜினீயர் கைது!!

Read Time:1 Minute, 29 Second

4e5c7937-3f1f-483d-aa37-0a1a5717f77d_S_secvpfகொளத்தூர் அஞ்சுகம் தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மகள் சிந்து. இவர் மன்னார்குடியில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற போது அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிலம்பரசனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

இதற்கிடையே சிந்துவுடன் பேசுவதை சிலம்பரசன் தவிர்த்தார். மேலும் சேர்ந்து வாழவும் மறுத்தார். இதனால் வேதனை அடைந்த சிந்து கடந்த 7–ந்தேதி தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் விசாரித்த போது சிலம்பரசனை பதிவு திருமணம் செய்திருப்பதும் அவர் சேர்ந்து வாழ மறுப்பதும் தெரிந்தது.

இதுகுறித்து வில்லிவாக்கம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாணியம்பாடியில் ஆசிரியை அடித்ததாக கூறி 23 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
Next post களக்காடு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் டிஸ்மிஸ்!!