மரக்காணம் அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 4 பேர் கும்பல்!!

Read Time:2 Minute, 7 Second

613994dd-3409-4c51-8829-498ef3e30e85_S_secvpfகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண் கவிதா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

மாலை 5 மணி அளவில் உறவினர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20), சிவக்குமார் (19), ராஜவேல் (22), ரவி (18) ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து கவிதாவை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர்.

4 வாலிபர்கள் அந்த வீட்டிற்குள் செல்வதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு மற்றவர்களிடம் சொன்னார். அவர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் பார்த்தனர். அப்போது 4 பேரும் மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

உடனே அவர்கள் 4 வாலிபர்களையும் மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களை மரக்காணம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும், அந்த மாணவியையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

மாணவிக்கும், வாலிபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரபிரதேசத்தில் பென்சில் திருடியதாக தாக்கப்பட்ட மாணவன் பலி: தலைமை ஆசிரியர் கைது!!
Next post காதலன் வீட்டிற்குள் புகுந்து புதுபெண்ணிற்கு அரிவாள் வெட்டு: ஆஸ்பத்திரியில் காதலன் தாலி கட்டினார்!!