இந்து கோவில் வரைபடங்களுடன் ஆந்திராவில் சிமி தீவிரவாதி கைது!!

Read Time:2 Minute, 26 Second

e4758cc6-b408-4385-8c15-679749195aab_S_secvpfதெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர்.

அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு 2 மாநில அரசுக்கும் எச்சரிக்கை செய்தது. இதனால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குண்டூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு தீவிரவாதி பயணிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தெனாலி ரெயில் நிலையத்தில் வந்து நின்ற அந்த ரெயிலை சோதனையிட்டு சந்தேகப்படும் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்து ரெயிலில் இருந்து இறக்கினர்.

விசாரணையில் அவனது பெயர் முனீர் அகமது என்பதும், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவனிடம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களின் வரைபடங்கள் உள்ளது. அந்த கோவிலுக்கு செல்லும் பாதை, வெளியேறும் பாதை போன்ற குறிப்புகள் இருந்தது.

எனவே அவன் சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவனிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். தெனாலி போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனோரமாவிடம் ஆசீர்வாதம் பெற்ற விவேக்!!
Next post திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!