சூரத் சிறையில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது திடீர் தாக்குதல்!!

Read Time:1 Minute, 32 Second

09f5bd9f-6b96-4c43-9ac8-c4f945261efe_S_secvpfபாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய், சிறையில் இன்று தாக்கப்பட்டார்.

ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நாராயண் சாயை கைது செய்து சூரத்தில் உள்ள லஜ்போர் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாராயண் சாய் இன்று சிறைச்சாலையில் தன்னை சந்திக்க வந்த நபர்களிடம் பேசிவிட்டு தனது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பப்லூ பரிந்தா என்ற கைதி நாராயண் சாயை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பப்லூவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், ஒரு மாதத்திற்கு முன் ஒரு கைதியை தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!!
Next post ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா நிர்வாகிகள் முன்ஜாமீன் கோரி மனு!!