திருப்பரங்குன்றம் கால்வாய் கரையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணம்!!

Read Time:1 Minute, 16 Second

458da3f0-e9f2-4f6d-9303-e14dd258da9a_S_secvpfதிருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் பகுதியில் ஊரணி உள்ளது. இங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் கரை பகுதிக்கு இன்று காலை சிலர் சென்றனர். அப்போது அங்கு பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு நாகராஜ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து குழந்தை பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே இருக்கும் என தெரிகிறது. குழந்தை இறந்தே பிறந்தா? அல்லது பிறந்த குழந்தையை கல்மனம் படைத்தவர்கள் கொன்று வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது. தவறான உறவில் பிறந்த குழந்தையா? அதன் பெற்றோர் யார்? என்று குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு முத்தம் கொடுக்கணுமா?
Next post அயோத்தியில் கோவில் வளாகத்தில் பூசாரி படுகொலை!!