ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!!

Read Time:1 Minute, 42 Second

rajani2சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கிலும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. இவரை ஒரு தடவையாவது பார்த்துவிட மாட்டோமா? என்ற ஆசை ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஆழமாக புதைந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாள் மற்றும் அவருடைய படங்களின் விழாக்களுக்கும் மட்டுமே ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகர் விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ரஜினியிடம் சென்று ஆட்டோக்கிராப் வாங்குவதற்காக அவருடைய கையில் ஏதும் இல்லாத நிலையில், தன் கைவசம் இருந்த பயண டிக்கெட்டை ரஜினியிடம் காட்டி ஆட்டோக்கிராப் கேட்டுள்ளார்.

ரஜினியும், ரசிகரின் ஆசையை நிறைவேற்ற அந்த பயண டிக்கெட்டில் தனது கையெழுத்தை போட்டுள்ளார். இது அந்த ரசிகருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சமூக இணையதளங்களில் ரஜினி கையெழுத்து போட்ட டிக்கெட்டும், ரஜினி விமான நிலையிலிருந்து வெளியே வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அயோத்தியில் கோவில் வளாகத்தில் பூசாரி படுகொலை!!
Next post சூரத் சிறையில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது திடீர் தாக்குதல்!!