காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்!!

Read Time:1 Minute, 25 Second

kanjana2லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி வரும் படம் ‘காஞ்சனா 2’. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

முனி 3 கங்கா என்ற பெயரில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இறுதி கட்டத்தை நெருங்கியதும் காஞ்சனா-2 என தலைப்பை மாற்றினார்கள். இதன் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்த படக்குழுவினர், கிராபிக்ஸ் பணியை முடித்து விட்டு படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர்.

படத்தைப் பார்த்து ஆய்வு செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 16ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வழங்க, உலகம் முழுவதும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா நிர்வாகிகள் முன்ஜாமீன் கோரி மனு!!
Next post செம்மரக்கடத்தல் வேட்டையில் ராசிபுரம் கடத்தல்காரர் உள்பட 14 கூலி ஆட்கள் கைது: ஆந்திர போலீசார் நடவடிக்கை!!