12 ஆயிரம் விலைமாதர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்!!

Read Time:3 Minute, 4 Second

red13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜப்பானை சேர்ந்த 64 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஜப்பானியப் பள்ளிக்கு இவரை இடமாற்றம் செய்து அனுப்பியது. அங்கு பல ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் அன்றாடம் பல விபசாரிகளுக்கு பணம் கொடுத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

தினம் ஒரு புது மலர் என கொண்டாட்டம் போட்ட யுஹே டகாஷிமா, தனது ஒவ்வொரு படுக்கை தோழியுடனும் புகைப்படம் எடுத்து சேகரிக்க தொடங்கினார். மணிலாவில் இருந்து ஜப்பானுக்கு திரும்பி வந்து செட்டில் ஆன பிறகும் பிலிப்பைன்ஸ் பெண்களை மறக்க முடியாமல் ஆண்டுக்கு ஒருமுறை ‘செக்ஸ் டூர்’ சென்ற இவர், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து புத்தம்புது மலர்களாக பதம் பார்க்க தொடங்கினார்.

இப்படி கடந்த 27 ஆண்டுகளில் 65 முறை செக்ஸ் சுற்றுலா சென்றுள்ளார். 14 முதல் 70 வயதுக்குள் பலதரப்பட்ட சுமார் 12 ஆயிரம் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி சுமார் 15 ஆயிரம் போட்டோக்கள் கொண்ட 400 தனி ஆல்பங்களை பாதுகாத்து வைத்துள்ளார்.

கடைசியாக ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இந்த மன்மதராசாவின் வண்டவாளம் யார் மூலமாகவோ போலீசாருக்கு தெரியவந்தது. அவரது மலரும் நினைவுகள் ஆல்பத்தில் காணப்பட்ட ஒரு சிறுமிக்கு 13-14 வயது மட்டுமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய போலீசார் அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஜப்பானிய சட்டங்களின்படி வெளிநாட்டில் குற்றம் செய்திருந்தாலும் அதுபற்றி தெரியவந்தால் கைது செய்து தண்டனை வழங்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு. எனவே, இவரால் கற்பழிக்கப்பட்டவர் பிலிப்பைன்ஸ் சிறுமியாக இருந்தபோதிலும் குற்றவாளியான யுஹே டகாஷிமா ஜப்பானியர் என்பதால அவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமீர் கானை அழவைத்த மார்கரிதா!!
Next post அரை நிர்வாண பெண்களுடன் கிருஷ்ணரின் படம்: ஓவியருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!!