வட கொரிய ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது

Read Time:56 Second

Japan.Flag.jpgபரிசோதனை முயற்சியாக வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் புதன்கிழமை விழுந்தது. வட கொரியா செவ்வாய்க்கிழமை இரவு தான் தயாரித்த ஏவுகணையை பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 12.02 க்கு சில நிமிடங்களில் இந்த ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது.

தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை தயாரிக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் வட கொரியா அறிவித்திருந்தது. கடல்பகுதியில் விழுந்த ஏவுகணை அந்த வகையைச் சேர்ந்ததா என ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லண்டனில் தீ விபத்து 3 தமிழர்கள் பலி.
Next post விண்வெளி ஓடம் வெற்றி: “நாசா’ மகிழ்ச்சி