ராசிபுரம் அருகே அம்மன் கோவிலில் தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!!

Read Time:3 Minute, 22 Second

6d7c56db-7106-4398-9ed0-d32964de6e2d_S_secvpfநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், புகழும் வாய்ந்த பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் திருவிழா நடந்தது. கடந்த 5–ந் தேதி ஞாயிற்றுகிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று திங்கட்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கோவில் பூசாரி கோவில் கிணற்றில் புனித நீராடி குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது அவர் சுவாமி முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெயை முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி விளக்கு திரியை பற்ற வைத்தார்.

அப்போது விளக்கு எண்ணெயில் எரிவது போல் தண்ணீரில் விளக்கு கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த அதிசய காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். தண்ணீரில் அதிகாலை 4.45 மணிக்கு பற்ற வைக்கப்பட்ட விளக்கு காலை 6 மணி வரை எரிந்து அணைந்தது. தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம் திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும். தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் ஆண்டுதோறும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணெயைக் கொண்டுதான் விளக்கு வைக்கப்படும்.

இது குறித்து கோவில் பூசாரி கூறியதாவது:–

முன்னோர் காலத்தில் ஒரு முறை கோவில் விளக்கில் எண்ணெய் தீர்ந்த போது பூசாரி ஊர் தர்மகர்த்தாவிடம் விளக்கு வைக்க எண்ணெய் வாங்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த தர்மகர்த்தா ஒரு வித விரக்தியுடன் பணம் இல்லை என்றும், சக்தியுள்ள மாரியம்மன் தானே, தண்ணீரை ஊற்றி பற்ற வை எரியும் என்றும் கூறியுள்ளார். அதே போல் கோவில் பூசாரிகள் தண்ணீர் ஊற்றி விளக்கை பற்ற வைத்தனர். அப்போது விளக்கு சுடர் விட்டு எரிந்துள்ளது. இதனால் அன்று முதல் இங்குள்ள மாரியம்மன் பச்சைத் தண்ணி மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரம்பலூர் அருகே இளம்பெண் கற்பழித்து கொலை!!
Next post புதுக்கோட்டையில் பெண் தகராறில் ரவுடி வெட்டிக்கொலை!!