பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் ஆசிரியையை கட்டிப்பிடித்து முத்தம்: போலீசார் விசாரணை!!
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு ஆசிரியரும், ஆசிரியை ஒருவரும் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று போலீஸ் அதிகாரிகளின் ‘வாட்ஸ் அப்’ பில் இன்று பரவியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை. அங்கு இது வரை அப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களின் பெயர் பட்டியல் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை. அதன் அருகே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கையெழுத்து போடும் பதிவேடு உள்ளது.
காலை நேரம். பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு ஆசிரியர்கள் வரிசையாக வந்து தங்கள் வருகையை பதிவு செய்கிறார்கள்.
அப்போது ஒரு ஆசிரியை கையெழுத்திட தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகிறார். அவர் வந்த அடுத்த வினாடி ஒரு ஆசிரியரும் அங்கு வேகமாக வருகிறார். அவர் கையெழுத்திட வந்த ஆசிரியையை கட்டி அணைத்து முத்தம் இடுகிறார். அப்போது அங்கு இன்னொரு ஆசிரியர் வரும் சத்தம் கேட்கிறது.
கட்டி அணைத்த ஆசிரியர், ஆசிரியையை விடுவித்து விட்டு வேகமாக வெளியே செல்கிறார். இத்துடன் காட்சி முடிகிறது. சுமார் 42 வினாடிகளுக்கு இந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கு வரும் குறிப்பிட்ட அந்த ஆசிரியரும், ஆசிரியையும் அடிக்கடி இது போன்று நடந்து கொள்வதை தெரிந்து கொண்ட ஒருவர் தான் இந்த காட்சியை மறைந்திருந்து படம் பிடித்து உள்ளார்.
இப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது. இதனால் தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். அவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருக்கும்.
இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் அறை பெரும்பாலும் ஆள் அரவமின்றி காணப்படும். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே அந்த ஆசிரியரும், ஆசிரியையும் தங்களின் லீலையை நிகழ்த்தி இருக்கலாம் என தெரிகிறது.
காரணம் ஆசிரியர், ஆசிரியையை கட்டி அணைக்கும் போது ஆசிரியை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதற்கு உடன்படுவது வீடியோ காட்சியில் தெளிவாக தெரிகிறது. எனவே இவர்களின் சில்மிஷ விபரம் தெரிந்தவர்களே இதை மறைந்திருந்து படம் பிடித்து இருக்கலாம் என தெரிகிறது.
இப்போது ’வாட்ஸ் அப்’ தகவல்களுக்கு மவுசு அதிகரித்து அதன்பேரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதை அறிந்தே இந்த காட்சி போலீசாரின் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
அதற்கேற்ப போலீசாரும் அந்த பள்ளி எங்குள்ளது என்பதை வீடியோ காட்சியில் உள்ள படங்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த காட்சிகள் உண்மையானது தானா? உள்நோக்கம் கொண்டதா? என்பது பற்றியும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இது பற்றி போலீசார் கூறும்போது, கல்வி அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த வீடியோ காட்சிகள் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் கருத்துக்களை கேட்டபின்பே இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Average Rating