8 வருடமாக ஜோதிகா மறைத்த விடயம் இப்போ அம்பலமானது…!!
திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்கே ‘36 வயதினிலே’. இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகள்களுடன் கலந்துகொண்டார். மேலும், சிவகுமார், கார்த்தி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், பாண்டிராஜ், வெங்கட் பிரபு, ராதாமோகன், பாலா, தரணி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சூர்யாவின் அம்மா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ பாடலை பின்னணி பாடகி லலிதா பாடினார்.
பின்னர், சூர்யா பேசும்போது, இந்த படத்தோட இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் தயாரிப்பாளர் தனஞ்செயன் மூலமாகத்தான் எனக்குத் தெரியும்.
8 வருடமாக என்னையும், என் குழந்தைகளையும் பராமரிப்பதில் அக்கறை காட்டிய ஜோதிகா, தனது மனதுக்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மூடி மறைத்து வைத்துக் கொண்டே இருந்துள்ளார். ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் வந்து இந்த கதையை சொன்னதும், இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை ஜோதிகாவின் முகத்தில் பார்த்தேன். உடனே, என்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவெடுத்தேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று என் மனதில் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. இப்படத்துக்காக 36 வயதுடைய 10 பெண்களுக்கு அவர்களுடைய நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating