ஈரோட்டில் மாணவர்களிடம் பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்!!

Read Time:1 Minute, 17 Second

914931862394311179jailman2ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிபவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் அப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணனுக்கு நீதிபதி திருநாவுக்கரசு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் தொல்லை கொடுக்கும் கணவனையே போலீசில் பிடித்து கொடுக்கும் வகையில் பெண்கள் துணிந்துள்ளனர்: பெண் நீதிபதி!!
Next post சிறுமி கற்பழிப்பு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: மாதர் சங்கத்தினர் மனு!!