தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 36 Second

afb6c7d0-e577-4c24-9362-7efdd6ab049e_S_secvpfதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கருப்பசாமி. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். திடீரென மாணவி மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். அதிர்ச்சியடைந்த கருப்பசாமி இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி விசாரணை நடத்தினார்.

அப்போது தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்த குணசேகரனின் மகன் மூவேந்திரன் (வயது 25) மாணவியை பின் தொடர்ந்து வந்ததும், ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கியதும் தெரிய வந்தது.

இதற்கு மூவேந்திரனின் தந்தை குணசேகரனும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசீந்திரம் அருகே பாலீஷ் செய்வதாக கூறி பெண்களிடம் நகை மோசடி: பீகார் வாலிபர் கைது!!
Next post வதந்தியால் பயந்து போன நடிகை!