திருவண்ணாமலையில் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 பெண்களிடம் 32 பவுன் நகை திருட்டு!!

Read Time:1 Minute, 23 Second

d9d3926a-abfc-49ca-926d-0acec181da22_S_secvpfதிருவண்ணாமலை அருகே உள்ள அருணகிரிபுரம் பகுதியில் ஜோதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி வயதான பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச்சென்று விட்டனர்.

திருக்கோவிலூர் ரோட்டை சேர்ந்த கம்சலா (வயது 65) என்பவரிடம் 5½ பவுன் நகை, பூங்காவனம் (60) என்பவரிடம் 6 பவுன் நகை, ருக்மணியிடம் (70) 14 பவுன் நகை, விஜயலட்சுமியிடம் (50) 2½ பவுன் நகை, கண்டியாங்குப்பத்தை சேர்ந்த ருக்கு என்பவரிடம் 4 பவுன் நகை என மொத்தம் 32 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து 5 பேரும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கிய புதுவை பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!
Next post FIRST LOOK தகவல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!