கோவையில் கார் டிரைவர் கொலையில் கள்ளக்காதலி சிக்கினார்: போலீசார் தீவிர விசாரணை!!

Read Time:3 Minute, 54 Second

83050255-09bf-4ec8-b41e-5e4fc3f84519_S_secvpfகோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஜெபராஜ் (45) என்பவர் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுப்பற்றி தெரியவந்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த கொலை சம்பவம் குறித்து துப்பு துலக்க மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்வரன், சந்திரமோகன், ஜோதி, சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டியில் யாராவது கொலை செய்தார்களா? என்று தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜெபராஜியின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். அப்போது ஜெபராஜ், குறிப்பிட்ட ஒரு எண்ணுக்கு பல முறை அழைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சீதாலட்சுமி என்ற ஒரு பெண் பேசினார்.

இதையடுத்து போலீசார் ஜெபராஜ் குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவர் கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் ஜெபராஜிக்கும், சீதாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக பொழுதை போக்கியுள்ளனர்.

ஜெபராஜியுடன் ஜாலியாக இருந்த அந்த சீதாலட்சுமி கடந்த சில நாட்களாக அவருடன் உள்ள தொடர்பை குறைந்து கொண்டார். இது ஜெபராஜிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சீதாலட்சுமியின் நடத்தை மீதும் சந்தேகம் வலுத்தது.

அப்போது சீதாலட்சுமிக்கு மேலும் 2 வாலிபர்களுடன் தொடர்பு இருப்பது ஜெபராஜிக்கு தெரியவந்தது. இது அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அந்த 2 வாலிபர்களையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து சீதாலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை பியா பாஜ்பாய்- அழகிய படங்கள் -அவ்வப்போது கிளாமர்-
Next post திருச்செந்தூர் அருகே திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை: காதலன் கைது!!