உ.பி யில் தொடரும் கொடூரம்: துப்பாக்கி முனையில் 2 இளம் சகோதரிகள் பாலியல் வன்புணர்வு!!

Read Time:1 Minute, 38 Second

424b742d-547a-4cac-86e9-786ffe49d117_S_secvpfஉத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் மீதான பாலியல் குற்றங்கள் தினசரி செய்திகளாகி வரும் அவல நிலையில், இளம் சகோதரிகள் 2 பேர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

படவுன் மாவட்டத்தில் உள்ள ஜரீப் நகர் பகுதியில் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே வந்த 2 இளம் சகோதரிகளை கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் அவர்கலை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளது.

பின்னர் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் அந்த கொடூர கும்பலைச் சேர்ந்தவர்களை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சகோதரிகளை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். அது கிடைத்ததும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய உதவி!!
Next post சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு வலைவீச்சு!!