பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நடிகை…!!

Read Time:2 Minute, 31 Second

rai-lakshmiதமிழில் ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராய் லட்சுமி. இதுதவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை இந்தியில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது முதன்முதலாக பாலிவுட்டில் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் ராய் லட்சுமி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கி வரும் ‘அகிரா’ என்ற படத்தில் ராய் லட்சுமி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக சோனாக்சி சின்ஹா நடித்து வருகிறார். இப்படம் தமிழில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக் ஆகும்.

இதுகுறித்து ராய் லட்சுமி கூறும்போது, பாலிவுட்டில் எனது முதல் படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’ படத்தில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் ரொம்ப எளிமையான இயக்குனர். அவருடைய படத்தில் நடிப்பது ரொம்பவும் ஜாலியாக இருக்கிறது. இதைவிட எனக்கு ஒரு நல்ல தொடக்கம் இருக்கும் என்பதை என்னால் கூறமுடியாது.

நடிகர், இயக்குனர் என பல முகங்களை கொண்ட அனுராக் காஷ்யப் உடன் நடிப்பதும் எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த பலர் பணியாற்றும் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியாக இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

ராய் லட்சுமி தமிழில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக ‘சவுகார்பேட்டை’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!
Next post கட்டணம் செலுத்தாததால் 1-ம் வகுப்பு மாணவியை அடித்து சித்திரவதை செய்த டீச்சர்!!