போன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்!!

Read Time:3 Minute, 0 Second

fb1ce968-1d33-48fb-b35e-c273d3034bbe_S_secvpfகோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. விபசார கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். புறநகர் பகுதிகளில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட கும்பலை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பின்னரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் போன் செய்தால் வீடுகளுக்கு ஒரு கும்பல் அழகிகளை சப்ளை செய்வதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. போனில் பேசிய அந்த நபர் செல்போன் எண்ணையும் கூறினார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த நம்பருக்கு போன் செய்தனர்.

போனை எடுத்த வாலிபரிடம் ‘எங்களுக்கு அழகி வேண்டும். கோவைக்கு அழைத்து வர முடியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் கோவையில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளது. எனவே கோவை புறநகர் பகுதிக்கு அழகியுடன் வருகிறோம். நீங்கள் சின்னியம்பாளையம் பகுதிக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

போனில் வாலிபர் பேசியபடி போலீசார் சின்னியம்பாளையத்தில் காத்திருந்தனர். அந்த வாலிபர் திருப்பூரில் தங்கியிருந்த மேற்குவங்காள அழகியுடன் காரில் சின்னியம்பாளையம் வந்தார். வாடிக்கையாளர் போல் காத்திருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்த புரோக்கரையும், அழகியையும் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் புதுச்சேரியை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. அழகியை மீட்ட போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதான புரோக்கர் வெளிமாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்துவது தெரியவந்தது. கைதான புரோக்கரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் விபசார வேட்டை தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்மச்சாவு வழக்கில் திருப்பம்: திருச்சி விமான நிலைய ஊழியர் படுகொலை? – ஆமை கடத்தல் கும்பல் தொடர்பு!!
Next post பேரணாம்பட்டு ஆசிரியை கொலை வழக்கில் கணவன் கைது!!