கேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை!!

Read Time:2 Minute, 17 Second

4b528976-fc43-49c1-a0a7-a48d40be39a1_S_secvpfகேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விஜயதாஸ் (வயது 65) தொழிலாளி.

இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியில் வசித்து வந்தார். அப்போது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கமலம் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அதே பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பிருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்றும் அவர்களுக்கிடையே பிரச்சினை மூண்டது. இதில் விஜயதாஸ், வீட்டில் இருந்த விறகு கட்டையால் கமலத்தின் தலையில் அடித்தார். அவரது தலை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் கமலம் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

அதன் பின்னர் விஜயதாஸ் வீட்டின் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்காததால் அக்கம் பக்கத்தினர் இது பற்றி வெள்ளறடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கமலம் கொலை செய்யப்பட்டும், விஜயதாஸ் தற்கொலை செய்தும் இறந்து கிடந்ததை கண்டனர்.

இருவரின் பிணத்தையும் போலீசார் கைப்பற்றி வெள்ளறடை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயதாஸ், கமலத்தை கொலை செய்ய காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை!!
Next post சிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு!!