பீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி!!

Read Time:2 Minute, 0 Second

92fb38b4-76d6-4abd-ae76-dbfa994e915c_S_secvpfபீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளை குரங்கு ஒன்று கதி கலங்க செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரெயில் டிரைவர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி தாக்கியுள்ளது.

கடந்த வாரம் தனது சகோதர குரங்கு ஒன்றை ரெயில் விபத்தால் இழந்த அந்தக் குரங்கு, அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக கண்ணில் படும் ரெயில் டிரைவர்களைத் தேடித்தேடித் தாக்குவதாக அப்பகுதி ரெயில்வே அதிகாரி அக் ஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வால்மீகி நகர் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில் டிரைவரை அந்த குரங்கு தாக்கியது. நல்ல வேளையாக ரெயில்வே அதிகாரிகள் சிலர் அவரை உடனடியாக வந்து காப்பாற்றினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடி பக்கத்து பிளாட்பார்மிற்குச் சென்ற அந்த குரங்கு மற்றொரு டிரைவரையும் தாக்கியது. சுதாரித்துக் கொண்ட அவர் ரெயில் என்ஜின் கதவினை மூடி அந்த குரங்கிடமிருந்து தப்பித்தார். இன்னொரு டிரைவரிடமிருந்தும் குரங்கு தாக்குவதாக அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் வந்துள்ளது.

குரங்கின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்வதால் தற்போது, வால்மீகி நகர் ரெயில் நிலையத்திற்கு வரும் டிரைவர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜீத்துடன் இணையும் ஸ்ருதி- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-
Next post உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!