தஞ்சையில் சமையல் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 30 Second

1841ac9c-8a6b-4492-984e-e70d6a764335_S_secvpfதஞ்சையில் மேலஅலங்கம் முருகன் காலனியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேந்திரன். (வயது35). பேச்சியம்மாளுக்கும் மகேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பேச்சியம்மாள் மகேந்திரனை திட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் பேச்சியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார்.

அவரிடம் இருந்து தப்பி சென்ற பேச்சியம்மாள் அவரது வீட்டில் வசிக்கும் துரை வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார். அங்கு சென்று மகேந்திரன் பேச்சியம்மாளை கொலை செய்ய முயன்றபோது துரை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் துரை கழுத்தில் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கொலை செய்யப்பட்ட துரை சமையல் தொழிலாளி ஆவார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கரந்தையில் தனியாக வசித்து வருகிறார்கள்.

தகவல் அறிந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், நகர மேற்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரனை கைது செய்தனர்.

துரைக்கும் மகேந்திரனுக்கும் இடையே நடந்த தகராறில் காயமடைந்த மகேந்திரன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகேந்திரன் குடிபழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. படுகொலை செய்யப்பட்ட துரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த வீட்டிற்கு குடி வந்ததாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!
Next post சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!!