மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் மணப்பெண் மாமா அடித்துக்கொலை!!

Read Time:2 Minute, 21 Second

4a17bee1-9219-43cc-b50d-cfebfbff3a52_S_secvpfமாப்பிளை வீட்டார் போன் பண்ணியபோது பெண்ணின் தந்தை போனை எடுக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்திற்கு அருகில் உள்ள முரத்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 20-ம்தேதி மணமகனின் வீட்டைச்சேர்ந்த ஒருவர் மணமகளின் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

திடீரென்று திருமணத்தை நிறுத்தியதால், மாப்பிள்ளை குடும்பத்தினரை சமதானப்படுத்த பெண்ணின் மாமா மணமகனின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தங்கள் வீட்டிற்கு வெளியே பெண்ணின் மாமா சிலரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பலுடன் வந்த மணமகன், துப்பாக்கி மற்றும் கத்தியால் அவர்களை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மணகளின் மாமா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். அவரது நண்பர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவானவர்களை தேடிவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போனை எடுக்காத காரணத்தால் திருமணம் நின்றதும், இந்த விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த பெற்றோரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமமக்கள்!!
Next post சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவான போலீசாரை பிடிக்க தீவிரம்!!